#BIG BREAKING: இந்திய அணியில் இடம் பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி!
Jun 6, 2026, 13:38 IST
இந்திய அணி இன்னும் சில நாட்களில் அயர்லாந்தில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி வரும் 29ம் தேதி அயர்லாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலில் 16 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.