#BIG BREAKING : மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!!
நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் அரசாங்கம் தரப்பில் மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று 2-வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை இரு தரப்பினருக்கும் பொதுவாக அரசியல் சாசன கிளப்பில் நடைபெற்றது. அரசாங்கம் தரப்பில் சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக மந்திரி ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். கரப்பான் பூச்சி ஜனதா தரப்பில் இருந்து அதன் செய்தி தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும் ஜே.பி.நட்டா நிருபர்களிடம் கூறுகையில், “கூட்டத்தில் நாங்கள் அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தோம். பிரச்சினைகள் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்டன. தேர்வு சீர்திருத்தங்களுக்காக 3 முக்கிய கோரிக்கைகளையும், 5 ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இது தொடர்பாக அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திய பிறகு, நாளை (அதாவது இன்று) பிற்பகல் மீண்டும் அவர்களைச் சந்திப்போம். அப்போது அரசாங்கத்துக்குள் நாங்கள் நடத்திய கலந்துரையாடல் குறித்து தெரிவிப்போம்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.