×

#BIG BREAKING : ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு: பலாஷ் முச்சலுடன் திருமணம் ஒத்திவைப்பு!

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார்.

 

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.

 

மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா இன்று (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது 

மந்தனா பண்ணை வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஸ்மிருதியின் வணிக மேலாளர் துஹின் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.அங்கு அவர் தற்போது அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். செய்தியைக் கேட்டதும் ஸ்மிருதி மந்தனாவும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இந்நிலையில் இவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. திருமண விழாக்கள் எப்போது மீண்டும் தொடங்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திரு. ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம். ஒருவேளை அது சாதாரணமாக இருக்கலாம், அவர் நலமாக இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவர் மோசமாகிக் கொண்டிருந்தார். எனவே, எந்த ஆபத்தும் எடுக்க வேண்டாம் என்று நினைத்தோம், எனவே நாங்கள் ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் கண்காணிப்பில் உள்ளார்," என்று ஸ்மிருதியின் மேலாளர் கூறினார்.