×

#BIG BREAKING : ஆர்.பி.சௌத்ரி விபத்தில் மரணம்…!

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஆர் பி சௌத்ரி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் மூன்று முறை பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார். இவரின் மகன்களான ஜீவா மற்றும் சித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் நடிகர்களாவார்.

1998 ஆண்டு முதல் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ஆர்.பி.சௌத்ரி. ஆரம்பத்தில் இரண்டு திரைப்படம் மலையாளத்தில் தயாரித்தார். அதற்கு பிறகு 1990 ஆம் ஆண்டு புதுவசந்தம் படத்தை தயாரித்து தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் புதுவசந்தம், புரியாத புதிர், நாட்டாமை, சூரியவம்சம் என பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர்  அவருடைய பூர்வீகம்.

இந்நிலையில் இன்று நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை (மே 6) அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.