#BIG BREAKING : சென்னையில் சொத்து வரி 4 மடங்கு உயர்த்தப்பட்டதா..? மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!
சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிப்பு முகாம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சொத்து வரி என்பது தனிநபர் அல்லது நிறுவனத்தின் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்கு அரசு வரியை விதிக்கும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது.அதன்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப சொத்து வரி விதிக்கப்படும். சொந்தமாக வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்துள்ளவர்கள் சொத்துவரி செலுத்த வேண்டியது கட்டாயம்.
இந்நிலையில், சென்னை வாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் விண்வெளியாகியுள்ளது அதாவது சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூபாய் 5,000 சொத்து வரி கட்டிய கட்டிட உரிமையாளருக்கு தற்போது ரூ.28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் , சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் கூறியதாவது, குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது; ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு என்பது உண்மைக்கு மாறான தகவல்: அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் பொய் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.