#BIG BREAKING : அக். 6-ல் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் செப். 10 வரை விண்ணப்பிக்கலாம்!
அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்.நாளை மறுநாள் வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனு விநியோகம்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் மற்றும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விருப்ப மனுக்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியிட விருப்பம் உள்ள நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Breaking News | மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் | ADMK | By Election | Tamil News #BreakingNews #ADMK #BYElection #News18TamilNadu #TamilNews pic.twitter.com/yHuP0NnTZq
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 8, 2026