#BIG BREAKING : முதல் 2 வாரங்கள் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரபூர்வ அறிவிப்பு..!
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் தொடங்க இன்று தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களுடைய ஆறாவது கோப்பையை வெல்லும் முனைப்பிலும், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை தக்கவைக்கும் முனைப்பிலும் இந்த தொடரை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்காக அணி வீரர்கள் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஒப்பந்த செய்யப்பட்ட இங்கிலாந்து வீரர் சாம் காரண் ஆகியோர் காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மறுபக்கம் சிஎஸ்கே அணியிலிருந்து டிரேடிங் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றப்பட்ட சாம் கரணுக்கும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் காயத்திலிருந்து குணமடைய சில காலம் தேவைப்படும் என்பதால், அவரும் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது மாற்று வீரர்களோ வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் மகேந்திரசிங் தோனியால், முதல் 2 வாரங்கள் ஆட்டங்களில் விளையாட முடியாது. அதாவது முதல் 5 போட்டிகளில் தோனி விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோனிக்கு தசை பிடிப்பு பிரச்சினை மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரியாகிவிடும். இருப்பினும், 15 நாட்கள் வரை, ஓய்வு எடுப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால்தான், தோனி விலக உள்ளார்.
இது CSK ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது