#BIG BREAKING : பெட்ரோல் டீசல் மீது ₹10 கலால் வரி மத்திய அரசு குறைத்தது..!
Mar 27, 2026, 09:10 IST
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்தது. டீசலுக்கான கலால் வரி ரூ.10-ல் இருந்து பூஜ்ஜியமா குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த குறைப்பு பொதுமக்களுக்கு விலை குறைப்பாக தெரியாது.எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.