×

#BIG BREAKING: தங்கம் விலை மிக பெரிய அளவில் குறைந்தது..!!

 
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை கணிசமாக சரியத் தொடங்கியது. போர் பதற்றம் என்றால், பொதுவாகவே விலை தாறுமாறாக அதிகரிக்கும். ஆனால், ஈரான் மீதான போர் தாக்குதலின் எதிரொலியாக தங்கம் விலை சரிந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தையும் சரமாரியாக அடிவாங்கியுள்ளது.
அதன்படி, ஒரு வாரத்திற்கு மேலாகக் குறைந்து வந்த தங்கம் விலை, இன்றம் சரிந்துள்ளது நகைப்பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (மார்ச் 21) சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,08,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
இந்நிலையில், இன்று (மார்ச் 23) கிராமுக்கு ரூ.670 குறைந்து, ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5,360 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 670 குறைந்து 12,950-க்கும், சவரன் 5,360 குறைந்து ₹1,03,600-க்கும் விற்பனையாகிறது..
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.