#BIG BREAKING: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5,360 குறைந்தது..!!
Updated: Mar 19, 2026, 17:54 IST
சென்னையில் இன்று 22 கேரட் தங்கம் இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.400 வரை குறைந்து ரூ.13,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் இன்று ஒரே நாளில் ரூ. 5,360 குறைந்து ரூ. 1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 2,160 குறைந்த நிலையில் இன்று பிற்பகலில் ரூ. 3,200 குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று (மார்ச் 19) காலை கிராமுக்கு ரூ.270 குறைத்து ரூ.14,300க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று மாலை கிராமுக்கு மேலும் ரூ.400 குறைந்து ரூ.13,900க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,11,200க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ. 10 குறைந்த நிலையில் பிற்பகலில் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 265க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.