×

#BIG BREAKING : ஒரே நாளில் 3 முறை மாறிய தங்கம் விலை...!!

 

வரலாற்றில் முதல்முறையாக ஒரே நாளில் 3 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, காலை, மாலை சேர்த்து மொத்தமாக  சவரனுக்கு 7,600 குறைந்திருந்தது. ஆனால், தற்போது சவரனுக்கு 5,360 உயர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று (மார்ச் 23) ஒரே நாளில் மூன்றாவது முறை மாறியுள்ளது. அதன்படி தற்போது சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்துள்ளது. முன்னதாக சவரனுக்கு இன்று இரண்டு முறை ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,360க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.5,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,720க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் ரூ.12,670க்கு விற்பனையான நிலையில் ரூ.670 உயர்ந்து ஒரு கிராம் தற்போது ரூ.13,340க்கு விற்பனை செய்யப்படுகிறது