#BIG BREAKING: ஒரே நாளில் ரூ.2,160 குறைந்த தங்கம் விலை..!!
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணத்தினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை கிடுக்கிடு என உயர்த்தது. இதனையடுத்து கச்சா எண்ணெய்யின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
கடந்த மாதம் இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்த போடப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிச்சயமற்ற தன்மையில் உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, ஜூலை மாதம் தொடக்கம் முதல் தங்கத்தில் விலை குறைந்து வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 24) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 குறைந்து, ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்து ரூ.13,230-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது