☰
×

#BIG BREAKING :  சரசரவென சரிந்த தங்கம், வெள்ளி விலை...ஆபரணத் தங்கம் சவரன் ரூ.97,720-க்கு விற்பனை..!!

 

தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வந்தார். குறிப்பாக, பிற நாடுகளின் மீதான இறக்குமதி வரி விதிப்பு, அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, பண வீக்கம், டாலர் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை கடந்த ஆண்டில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.

ஆனால், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு உலக நாடுகளின் மீது விதித்திருந்த வரியை டிரம்ப் தளர்த்திய நிலையில், ஆண்டில் இறுதியில் தங்கம் விலை குறைந்து ரூ. 1 லட்சத்துக்கும் கீழே சென்றது. இதனால் 2026-ஆம் ஆண்டிலும் இந்த விலை சரிவு தொடரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஆண்டில் இறுதியில் மீண்டும் விலை ஏற்றம் பிடித்தது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த விலையேற்றம் தொடர்ந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவே, தங்கம், பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்து முதலீடுகளும் கடும் சரிவை சந்தித்தன.

ஒரு கட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஜூன் மாதத்திலிருந்து தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.

அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்தித்த நிலையில், ஈரான் மீதான போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்ட நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. இதன் காரணமாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டிலேயே முதன்முறையாக சவரன் விலை ரூ. 1 லட்சத்துக்கும் கீழே சென்றிருக்கிறது.

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 18) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.185-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000-க்கு விற்பனையாகிறது.