×

#BIG BREAKING : தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் 2026-27 : முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை..!  

 

தமிழக வெற்றிக் கழக அரசு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 06) காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக தனது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது: பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகவ் முதல்வர் விஜய். கோட் சூட் அணிந்த விவசாயி முதல்வர் விஜய். வேளாண் தொழில், உழவர் நலனையும் காக்க தவெக அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை பாதிக்கப்பட்டால் வேறு எந்த துறையும் சரியான பாதையில் பயணிக்க முடியாது.

விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் கடந்த கால திட்டங்கள் தொடரும். விவசாயிகளுக்காக புதிய திட்டங்களும் அமல்படுத்தப்படும்.

டெல்டா பகுதிகளில் 2509 கி.மீ. வாய்க்கால்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன.

விவசாயிகள் நலன் கருதி ரூ.134 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுதி திட்டம் அறிவிக்கப்பட்டது.

எல் நினோ தாக்கத்தால் 12 மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என கணிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும். வேளாண்மையையும் பாதுகாக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண் பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர்க்காப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து, நீர்ப்பாசன பரப்பை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

5 ஆண்டுகளில் 131 மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்காக ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ. 600 கோடியில் மண்வள பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 122 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வினோத், உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

உயர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு தலா ரூ.4000 சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படும்.

ரூ.4 கோடியில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் வழங்க உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டும். இதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு

நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 34.72 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

சிறுதானிய இயக்கத்திற்கு ரூ. 63.81 கோடி, குறுதானிய இயக்கத்திற்கு ரூ. 7.61 கோடி மற்றும் பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ. 27.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத்தடுப்பு திட்டம் ரூ. 7.35 கோடியில் செயல்படுத்தப்படும்

விவசாய நிலங்களில் நிரந்தப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 % கூடுதல் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் 

விவசாய நிலங்களில் நிரந்தப் பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.17.70 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அமைச்சர் வினோத் அறிவித்தார்.

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத்தடுப்பு திட்டம் ரூ. 7.35 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் வினோத் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே முகவரியில் பெறும் வகையில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.இதில் முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ. 1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.சிறு, குறு விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே முகவரியில் பெறும் வகையில் 8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.

3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.9 கோடி ஒதுக்கீடு.

அஞ்சலை அம்மாள் பெயரில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு.

17,315 ஏக்கருக்கு விதைக்கரும்பு மானியம் வழங்க ரூ.9.36 கோடி நிதி ஒதுக்கீடு.

பனைவிதைகள்,பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

‘வெற்றி இல்லதரசி வீட்டு தோட்டம்’ திட்டத்தில் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதை தொகுப்புகள், பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்து தோட்டம், நிழல்வலை குடிக்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.

தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகளுக்கு ரூ.41 கோடி ஒதுக்கீடு. அதன்படி சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தர பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் உள்ளிட்டவை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும்.
 

'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' என்ற பெயரில் இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.
 

பனைவிதைகள்,பனங்கன்றுகள் விநியோகம், பயிற்சி அளித்தல் மற்றும் பனை பொருள் உற்பத்தி கூடாரங்கள் அமைப்பதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டத்தை அமைச்சர் வினோத் அறிவித்தார். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.17,315 ஏக்கருக்கு விதைக் கரும்பு மானியம் வழங்க இந்த பட்ஜெட்டில் ரூ. 9.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்தார்.

விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே முகவரி என்ற பெயரில் 8 மாவட்டங்களில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ. 27.82 கோடியில் அமைக்கப்படும்.

மாவட்டந்தோறும் வேளாண் கண்காட்சி மற்றும் தொழில்நுட்பமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாக்களை நடத்த இந்த பட்ஜெட்டில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திரவ உயிர் உர உற்பத்தி மையங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 3.56 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.7.1 கோடியில் அமைக்கப்படும்.

தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த உயர் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.சாமந்தி சாகுபடியை ஒளியூட்டி ஊக்குவித்தல், பழ உறைகள், குலை உறைகள், பசுமைக்குடில், நிழல்வலை குடில், நிரந்தரப் பந்தல் அமைத்தல், வாழை விழாமல் இருக்க முட்டு கொடுத்தல் ஆகிய பணிகள் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ. 41 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

ஏற்றுமதியை ஊக்குவிக்க நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதி ஆகியவற்றுக்காக ரூ. 8.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தென்னை டானிக் பூச்சிநோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

 கரூர் மாவட்டத்தில் தென்னை நாற்றுப் பண்ணை தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் மற்றும் கொப்பரைக்கு விலை ஆதரவு அளிக்கும் வகையில் தென்னை சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 41 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

57,000 மெட்ரிக் டன் அளவிலான வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநிலத்தில் 24 ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்க ரூ.227.2 கோடி நிதி ஒதுக்கீடு

‘விவசாயம் காக்க’ ‘வெற்றி வான்மகள்’ திட்டம் உருவாக்கப்படும்.‘வெற்றி வான்மகள்‘ திட்டத்தின் கீழ் 100 மகளிர் உள்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.

100 சதவீத மானியத்தில் 500 பண்ணை குட்டைகள் உருவாக்கப்படும். அதேபோல் 75 சதவீத மானியத்தில் 500 பண்ணை குட்டைகள் தூர்வாரப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை உருவாக்கிடும் வகையில் பொதுப்பிரிவை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்து கொடுக்கப்படும்.

1000 விவசாயிகளுக்கு மானியத்தில் சூரிய பம்புசெட் வழங்கப்படும்.

இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும். 

திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் ரூ.4.6 கோடியில் அமைக்கப்படும் 

தஞ்சாவூரில் மாபெரும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் கதிரடிக்கும் களங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூ.2.8 கோடி ஒதுக்கீடு.

புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதற்காக சமபங்கு நிதி உறுப்பினருக்கு ரூ.5,000 ஆகும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 5.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

முறுங்கை மதிப்புக் கூட்டுதலை மேம்படுத்த 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் மற்றும் 2 சிறப்பு வணிக வளாகங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு

ரூ.4 கோடியில் வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அமைக்கப்படும்.

‘விளைச்சலை தாண்டி வருமானமே இலக்கு’ என்ற அடிப்படையில் தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.5.20 கோடி ஒதுக்கீடு.

நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில், நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய "உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி" தொடங்கப்படும். 

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு

‘நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.'

தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

விவசாயிகளுக்கு வானிலை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வழங்க வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் 

வேளாண் துறை மூலம் 37.51 லட்சம் மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் நடவு செய்யப்படும்.

200 மீன் குட்டைகள் அமைக்க மானியம் வழங்கப்படும்.

500 பால்பண்ணைகள் அமைக்க 25 சதவீத மானியம் வழங்கப்படும்.