#BIG BREAKING : இபிஎஸ் ஷாக்..! தவெக-வில் இணையும் அதிமுக 4 முன்னாள் அமைச்சார்கள்..!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக முன்னாள்அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடம்பூர் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் இன்று பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத் மற்றும் கடம்பூர் ராஜூ இருவரும் தவெக தலைமை அலுவலகத்தில் வருகைபுரிந்துள்ளனர்.
தகவலின் படி முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ உடன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம். எஸ்.எம் ஆனந்தன் ஆகியோரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் கட்சியில் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது. எம்.சி.சம்பத் தலைமையில் 500 பேர் தவெக கட்சியில் இணையவுள்ளனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜ், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் போன்றவர்கள் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.