×

#BIG BREAKING : திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது..!

 

ஆளுங்கட்சியான திமுக, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் வகையில் திட்டத்தை தீட்டி செயல்படுத்தி வந்தார். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என நிபந்தனையை விதித்தது. ஒரு கட்டத்தில் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லையென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் திமுகவை மிரட்டி வந்தது.


ஒரு கட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் வந்த அழுத்தம் காரணமாக கூட்டணி கட்சிகளோடு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20% இடம் வழங்க வேண்டும் என்ற பட்டியலை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் திமுகவோ கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென தெரிவித்து விட்டது. மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்க முடியும் எனவும் கூறிவிட்டது. இதனையடுத்து பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லாத நிலை ஏற்பட்டது. 

இந்தநிலையில் தான் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபல், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து கேட்டுள்ளார். அதற்கு பெரும்பாலானவர்கள் திமுக கூட்டணி தான் பெஸ்ட் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் திமுக உடனான தொகுதி பங்கீட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்த நிலையில், சோனியா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலினை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்த நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் என தொகுதி பங்கீட்டில் சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.