×

#BIG BREAKING: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக..!!

 

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்வி எழுந்தது. ஜனவரி 2வது வாரத்திலேயே தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், திடீரென பின் வாங்கினார்.

 

இதனிடையே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக தரப்பில் 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் டிமாண்ட் வைத்தார். இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கோரி இருந்தார்.ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இதுவரை தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இன்று (பிப்.19) தனது கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாகவும், யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவை எடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. 

 இந்நிலையில், சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா. விரைவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

 

கூட்டணி பற்றி முடிவெடுக்காமல் இருந்த பிரேமலதா கட்சியின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது