#BIG BREAKING : குஜராத் அணியுடன் தோல்வி; அரையிறுதி வாய்ப்பை இழந்தது சென்னை அணி..!
ஆமதாபாத்தில் நடந்து வரும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்துக்கு துவக்க வீரர்களாக கேப்டன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்த்து 125 ரன் சேர்த்த போது, கில் 64 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, வந்த பட்லரும் அதிரடி ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
சாய் சுதர்சனும், பட்லரும் சென்னை பவுலிங்கை வெளுத்து வாங்கினர். இருவரும் அரைசதம் அடித்தனர். சாய் சுதர்சன் 84 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 27 பந்தில் 57 ரன் குவித்தார். குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் சேர்த்தது. சென்னை அணியை பொறுத்தவரையில் முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன், அன்சூல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
மெகா இலக்கான 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சிஎஸ்கே,குஜராத் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.