#BIG BREAKING: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவியை அறிவித்த முதல்வர் விஜய்..!!
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுக்கு பதவி வழங்கி முதல்வரும் தவெக தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேருக்கு பதிவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது.
இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்:
1. C. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்
2. M.R.விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர்
3.இசக்கி சுப்பையா, முன்னாள் அமைச்சர். தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்
துணைப் பொதுச் செயலாளர்கள்
1.M.R. விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர். கரூர்
2. K. மரகதம் குமரவேல் ExMLA, மதுராந்தகம்
3. S. ராஜகோபால், நாங்குநேரி
4. H. ஜாகீர் உசேன், அம்பாசமுத்திரம்
5. V. குமார், பல்லாவரம்
6. S. யுவராஜ், சிங்காநல்லூர்
7. C.V. தினகரன், திருப்போரூர்
8. K. மணிகண்டன். DCS, ஆவடி
9. R.S. மணிகண்டன். வீரபாண்டி
10. K. அருள்ராஜ், திருவெறும்பூர்
11. SDR. சாமுவேல் ராஜ் , தூத்துக்குடி
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும், பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.