×

#BIG BREAKING : முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பின்னடைவு..!

 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.இந்த ஆரம்பப் போக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தவெக தலைவர் விஜய் 507 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் இந்த ஆரம்பக் கட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய் பெற்றுள்ள இந்த முன்னிலை தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான தபால் ஓட்டுக்களில் அமைச்சர்கள் கீதா ஜீவன், துரைமுருகன், ராஜ கண்ணப்பன், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு உள்ளிட்டோர் முக்கிய அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக.,வின் ஸ்டார் வேட்பாளர்களாக கருதப்பட்டவர்கள் தபால் ஓட்டுக்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி - முதல் சுற்று முடிவில் தவெக முன்னிலை!

முதல் சுற்று :

திமுக - 3244
தவெக - 4130
அதிமுக -1200