×

#BIG BREAKING: திருவள்ளூரில் அமோனியா கசிவு : பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!!

 

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் பகுதியில் கடல் உணவுகளைப் பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உணவு பதப்படுத்தும் பிரிவில் திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நச்சு வாயுவை சுவாசித்த அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

 

அம்மோனியா வாயுவை சுவாசித்த சில தொழிலாளர்களுக்கு வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில் 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முதற்கட்டமாகப் பாதிக்கப்பட்ட 10 பேர், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் கருவி) வசதி கொண்ட அவசரக்கால ஆம்புலன்ஸ்கள் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களுக்கும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் உயிரிழப்பு..

BREAKING || பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 6 பேர் உயிரிழப்பு; 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி… pic.twitter.com/8O0jgZLdsX

— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) June 21, 2026


 

null