×

#BIG BREAKING: த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!!

 

2016-21 அதிமுக ஆட்சியின்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவா் வெல்லமண்டி நடராஜன். அந்தக் கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராகச் செயல்பட்டாா்.

 

இதனிடையே, ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடா்ந்து, மீண்டும் அதிமுகவுக்கு வெல்லமண்டி நடராஜன் திரும்பினாா். இந்த நிலையில், அவருக்கு அமைப்புச் செயலாளா் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் வெள்ளமாண்டி நடராஜன் தவெக-வில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை நேரில் சந்தித்த அவர், கட்சியில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.