#BIG BREAKING : இந்திய அரசியலில் பெரும் திருப்பம்..!! தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் திமுக ஆதரவு..!!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி ஆ.ராசா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு என்பது தமிழகத்துக்கும், நாட்டுக்கும் சாதகமான முடிவு. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயரும் என்பதால் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு நிலைப்பாடு என்பது புதிய முடிவு அல்ல. அரசியல் காரணங்களுக்கானது அல்ல, தற்போதைய பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் குறைய கூடாது, தற்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 எனும் அளவில் இருக்கும் நிலையில் புதிய மசோதாவால் 7.21 என உயர்கிறது.
திமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை அழைத்து நிறைவேற்றிய தீர்மானங்களின் முடிவுகளுக்கு ஏற்ப, இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கிறத, என்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.