×

#BIG BREAKING : சட்டசபையில் வெளியான 67 மாஸ் அறிவிப்புகள்! வீடற்றவர்களுக்கு வீடு, இலவச சோலார் அடுப்பு!

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சட்டப்பேரவையில் விசிக துணைப்பொதுச்செயலாளரும், சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு சமூகநீதித்துறையின் சார்பில் 67புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் 100 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

* பள்ளிகளின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிப்புத் தொகை உயர்த்தப்படும்.

* 100 சமுதாய நலக் கூடங்கள் கட்டப்படும். தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் கட்டப்படும்.

* மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கப்படும்.

* ஆதிதிராவிட பெண்களுக்கு விடிவெள்ளி வாழ்வாதார திட்டம் தொடங்கப்டும்.

* வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.

* தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக்க முயற்சி எடுக்கப்படும்.

* சென்னை நந்தனத்தில் டிஜிட்டல் கற்றல் மற்றும் புதுமை மையம் அமைக்கப்படும். ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோராக்க மாற்ற திட்டம் அமைக்கப்படும்.

* சமூக நீதித் துறையின் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

* தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த சரிநிகர் திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* ஆதிதிராவிடர் விளைவிக்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும்.

* ஆதிதிராவிடர் பெண்களுக்கு சோலார் அடுப்பு வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு வருமான ஆதரவை வழங்க வேளாண் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

* வேலைவாய்ப்பை உருவாக்க திறன் பயிற்சி, தொழில்நுட்பத் திறன் பயிற்சி வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர்களுக்கு தொழில் முனைவு வாய்ப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

* தூய்மைப் பணியாளர் நலக்குழு உருவாக்கப்படும்.

* ஆதிதிராவிடர்களுக்கு எளிதாக கடன் வழங்க வசதி செய்து தரப்படும்.

* பழங்குடியின மொழி குறித்த வகுப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

* ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு கலைத் திறன் பயிற்சியை ஊக்குவிக்க சென்னையில் கலைத்திறன் பட்டறை பயிற்சி அமைக்கப்படும்.

* ஊடகத் துறையில் சிறந்து விளங்க பயிற்சி திட்டம் வழங்கப்படும்.

* ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கும் புரிந்துணர்வு திட்டம் வழங்கப்படும்.

* சமூக நீதி விடுதிகளில் கொசு வலை அமைக்கப்படும்.

* 10,000 மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்படும்.

* MBC Welfare Board அமைக்கப்படும்.

* மாணவர்களின் விடுதிக் கட்டணம் குறைக்கப்படும்.

* சூப்பர் கேம்பஸ் திட்டம் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.

#JUSTNOW || சமூக நீதித்துறை சார்பில் 67 புதிய அறிவிப்புகள்.. - அமைச்சர் வன்னிஅரசு அறிவிப்பு#TNAssembly | #AssemblySession | #TVK | #CMVijay | #DMK | #ADMK | #Speaker | #JCDPrabhakar | #AssemblyLive | #PolimerNews pic.twitter.com/57McXqmXN5

— Polimer News (@polimernews) August 27, 2026