அழகிய நிறங்களில் சைக்கிள்- மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள்
தமிழ்நாட்டில் பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்குவது தொடர்பான டெண்டரில் மாற்றங்கள் செய்தது தமிழ்நாடு அரசு.
தமிழகத்தில் கடந்த 2001-2002 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்திய நிலையில், தொடர்ந்து இந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டில் பயிலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுவருகிறது. தவெக அரசு அமைந்த பின்னர் சைக்கிளின் நிறமும், டிசைனும் மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளி மாணாக்கர்களுக்கு மிதிவண்டி வழங்குவது தொடர்பான டெண்டரில் மாற்றங்கள் செய்தது தமிழ்நாடு அரசு. மாணவிகளுக்கான மிதிவண்டி LILAC MIST நிறத்திலும், மாணவர்களுக்கான மிதிவண்டி ARMY GREEN நிறத்திலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிதிவண்டிக்கான ஹெல்மெட் IS 18808:2025 தரநிலைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. NABL அங்கீகாரம் பெற்ற அல்லது BIS அங்கீகரித்த ஆய்வகத்தின் TEST CERTIFICATE அல்லது TEST REPORT கட்டாயம் சமர்ப்பிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மிதிவண்டி விநியோகிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஏற்படும் பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.