×

காலை 9.30 மணிக்கு பாக்யராஜ் உடல் இறுதி ஊர்வலம்'.. நடிகர் பார்த்திபன்..!!

 

இயக்குநர் கே. பாக்யராஜ், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், மறைந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் உடலுக்கு நாளை (ஜூன்.28) காலை 9.30 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில் பாக்யராஜின் உடல் அவரது இல்லத்தில் நாளை காலை 9 மணி வரை வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு காலை 10.30 மணியளவில் பாக்யராஜ் உடல் கொண்டுவரப்படும். காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள், முதல்வர் விஜய் அறிவித்தபடி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/9dG79W8XVmE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9dG79W8XVmE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">