×

பாக்யராஜ் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது! - ரஜினிகாந்த் எக்ஸ் தளப் பதிவு!

 

 நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.