×

குரு பாரதிராஜா மறைந்த 17 வது நாளில் பிரிந்த பாக்யராஜ் உயிர்..!

 

தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ்.இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான்.

அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும். மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார்.

பாக்யராஜுன் முழுப் பெயர் கிருஷ்ணசுவாமி பாக்யராஜ். இவர் ஜனவரி 7, 1953 அன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் பிறந்தார்.இவரது மனைவி நடிகை பூர்ணிமா ஜெயராம். மகன் சாந்தனு பாக்யராஜ். மகள் சரண்யா பாக்யராஜ். இவர்கள் இருவரும் சில திரைப்படங்களில் நடித்துள்ளனர்.பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான '16 வயதினிலே' (1977) மற்றும் 'கிழக்கே போகும் ரயில்' (1978) ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். '16 வயதினிலே' திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் (கழுதையை ஓட்டிச் செல்லும் கதாபாத்திரத்தில்) முதன்முறையாக திரையில் தோன்றினார்.

பாரதிராஜாவின் திரையுலக வாழ்க்கையில் பாக்யராஜ் மிகவும் முக்கியமானவர்; அதேபோல், பாக்யராஜின் வாழ்க்கையில் பாரதிராஜா ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர்.இவர்கள் இருவரும் இரண்டு வார கால இடைவெளியில் மறைந்தது, மொத்தத் திரையுலகையும் ஈடுகட்ட முடியாத அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 10ம் தேதி தான் பாக்யராஜை திரைத்துறையில் அறிமுகம் செய்து இயக்குநர், நடிகராக உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா காலமானார். அவரது மறைவால் பாக்யராஜ் நொந்து போனார். நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தான் பாக்யராஜ் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
பாக்யராஜ் திரைத்துறையில் இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை அமைப்பாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியவர். இருப்பினும் இவருக்கு குரு என்றால் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா தான்.