மக்களே உஷார்! இனி பதிவெண் மறைத்து பைக் ஓட்டினால் வழக்கு பதியப்படும்...!
பைக் ஓட்டிகள் சிலர் தங்கள் எண் பலகையில் பூச்சு அடித்து, டேப் ஒட்டி, அல்லது துணி கட்டி எண் தெளிவாக தெரியாதபடி செய்கிறார்கள். சிலர் எண் பலகையை முற்றிலுமாக மடித்து வைத்துக் கொண்டு போக்குவரத்து கேமரா மற்றும் சிக்னல்களில் பதிவு ஆகாமல் தப்பிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் புகார் பதிவு செய்ய முடியாத நிலை உருவாகிறது.
, எண் பலகையை மாற்றியோ, போலி எண் பலகையோ பயன்படுத்தியவர்களுக்கு எதிராக மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 43 பைக் ஓட்டிகளுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் கூறுகையில் எண் பலகை தெரியாமல் இருந்தால், அந்த வாகனத்தின் விவரங்களை எடுக்க முடியாது. போக்குவரத்து AI கேமராக்கள் விதிமீறலை பதிவு செய்ய முடியாது. இதனால் அரசு பிழைத் தொகை வசூலில் இழப்படைகிறது. இதை திட்டமிட்ட குற்றம் எனக் கருதி, மோசடி வழக்கு பதிவு செய்கிறோம் என தெரிவித்தனர்.
பல பைக்கர்கள் போலி எண் பலகை வைத்திருந்ததும், சிலர் எண் பலகையை மடித்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் உடனடியாக தங்கள் எண் பலகைகளை சட்டப்படி திருத்திக்கொள்ள வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.