மக்கள் உஷார்..! 239 மருந்து மாத்திரைகள் தரமற்றவை; மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை..!
Aug 24, 2026, 05:50 IST
நாடு முழுவதும் விற்பனையாகும், மருந்து மற்றும் மாத்திரைகள், மத்திய, மாநில, மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்களின், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரத்துக்கும் அதிகமான மருந்து, மாத்திரைகள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதில், காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக பயன்படுத்தப்படும், 239 மருந்துகள் தரமற்றவை; ஒரு மருந்து போலியானது என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.