மக்களே உஷார்..! இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
Dec 3, 2025, 05:50 IST
சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது. கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இன்று கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இனறு கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.