×

மக்களே உஷார்..! இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுக்க போகுது..! 

 

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில், சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

10, 12ம் தேதிகளில், சென்னை, செங்கல்பட்டு உட்பட, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.