×

மக்களே உஷார்..! இன்று முதல் இந்த இணைப்புகள் வைத்திருக்கும் வீடுகளில் சிலிண்டர் சப்ளை கட்! 

 

நாட்டில் குழாய் மூலம் வழங்கப்படும் பிஎன்ஜி எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரை சுமார் 6.5 லட்சம் புதிய பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பிஎன்ஜி இணைப்பு பெற்ற பிறகும் பல குடும்பங்கள் தங்களின் பழைய எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்புகளைச் சரண்டர் செய்யாமல் இரண்டு இணைப்புகளையும் ஒரே முகவரியில் பயன்படுத்தி வருகின்றனர். புதிய விதிகளின்படி, ஒரே முகவரியில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் எல்பிஜி பயனர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 33.5 கோடியாக உள்ள நிலையில், பிஎன்ஜி பயனர்கள் 1.64 கோடியாக மட்டுமே உள்ளனர். இந்த நிலையை மாற்றவும், சிலிண்டர்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) தற்போது இரண்டு கனெக்ஷன்களையும் ஒன்றாக வைத்திருக்கும் வீடுகளைக் கண்டறியும் பணியைத் தொடங்கியுள்ளன. பிஎன்ஜி வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் எல்பிஜி சிலிண்டரைச் சரண்டர் செய்யாவிட்டால், அவர்களின் எல்பிஜி இணைப்பு தானாகவே ரத்து செய்யப்படும் அல்லது சிலிண்டர் சப்ளை நிறுத்தப்படும்.


பிஎன்ஜி பைப்லைன் வசதி உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், ஜூன் மாதம் முதல் தங்களின் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்யவோ அல்லது Refill செய்யவோ முடியாது. இதற்காக, நகர்ப்புற எரிவாயு விநியோக நிறுவனங்களும், எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் டிஜிட்டல் தரவுத்தளங்களை ஒன்றாக இணைத்துள்ளன. இதன் மூலம் யார் இரண்டு இணைப்புகளை வைத்துள்ளனர் என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். அதே வேளையில், பிஎன்ஜி இணைப்புகளுக்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இரண்டு சிலிண்டர் புக்கிங்கிற்கு இடைப்பட்ட 'லாக்-இன் பீரியட்' (Lock-in period) கால அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பயனர்கள்: இனி ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டரைப் புக் செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். முன்பு இது 21 நாட்களாக இருந்தது.

கிராமப்புற பயனர்கள்: ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டரைப் புக் செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.


பிஎன்ஜி கனெக்ஷன் பெற்ற 30 நாட்களுக்குள் எல்பிஜி இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று அரசு கூறியிருந்தாலும், பொதுமக்கள் தங்களின் எல்பிஜி கனெக்ஷனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், பிஎன்ஜி வசதி இல்லாத வேறு பகுதிகளுக்கு மக்கள் குடிபெயர்ந்தால், தங்களின் பழைய எல்பிஜி கனெக்ஷனை மீண்டும் ஆக்டிவேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், தற்போதைய மானிய விதிகளின்படி, தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படும் கூடுதல் சிலிண்டர்களுக்கு சந்தை விலை வசூலிக்கப்படும். இது தவிர, புதிய எல்பிஜி கனெக்ஷன் பெற விரும்புபவர்களுக்கு ரெகுலேட்டர், பைப் மற்றும் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்ட புதிய டெபாசிட் கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அமலுக்கு வரவுள்ளன. TITLE