மக்களே உஷார்..! வங்கிகள் தொடர்ந்து 4 நாட்கள் இயங்காது..!
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் வேலை என்ற நீண்டகால கோரிக்கையை அமல்படுத்தக் கோரி, ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஜனவரி 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால்,ஜன.24 (4-வது சனி), ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம்)ஆகிய தேதிகளில் ஏற்கெனவே தொடர் விடுமுறை வருகிறது. 27-ம் தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் வங்கிகள் 4 நாள்கள் இயங்காது.
தற்போது வங்கிகளில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள இரு சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. இதற்காக, 2024 மார்ச் மாதம் இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பி.ஏ.) மற்றும் யூ.எஃப்.பி.யூ. இடையே நடந்த ஊதிய மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு அதை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, வங்கி தொடர்பான பணிகளை விரைவாக முடித்துவிடுங்கள்.