☰
×

உஷார்.. உஷார்…! `தீபாவளி நாளில் இதை செய்தால்..’’ - காவல்துறை கடைசி வார்னிங்..!!

 

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், பண்டிகை காலகட்டத்தில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசங்கள், பைக் ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான முறையில் பைக் ஓட்டுவதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனை தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. சென்னையின் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ், சாகசங்களில் ஈடுபடுவோரை தடுப்பதற்காக காவல்துறை சார்பில் பிரத்யேக தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், தீபாவளி கொண்டாட்டத்தில் பைக் சாகசத்திற்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில சாகசம் வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் சுமார் 18,000 போலீசார் தீபாவளி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.