உங்கள் பணத்தை முதலீடு செய்ய சிறந்த வழி : குறுகிய காலத்தில் அதிக ரிட்டன்களை வழங்கும் SBI..!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குறுகிய காலத்தில் அதிக ரிட்டன் தரும் முதலீடுகளை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. SBI இந்த சிறப்பு FD திட்டத்தை 400 நாட்கள், 444 நாட்கள் மற்றும் 555 நாட்கள் கால அளவில் வழங்குகிறது. இதில் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல சீனியர் சிட்டிசன்களுக்கு கிட்டத்தட்ட 50 பேசிஸ் புள்ளிகள் அதிகமாக வழங்கப்படுகிறது. . எனவே, அதிக ரிட்டன்களை குறுகிய காலத்தில் கொடுக்கும் முதலீட்டு ஆப்ஷன்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும்.குறிப்பாக 5 லட்சம் அல்லது 10 லட்சம் போன்ற பெரிய அளவிலான தொகைகளை முதலீடு செய்பவர்கள் நல்ல ரிட்டன்களை எதிர்பார்க்கலாம்.
எஸ்பிஐ வங்கியின் இந்த சிறப்பு 444 நாட்கள் நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் முதலீட்டாளர்கள் 7.05 சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் பெறலாம். இந்த நிரந்தர வைப்பு நிதித் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீத வட்டியும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வட்டியும் கிடைக்கும்.
மேலும் இந்த ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அடமானமாக காட்டி கடன்கள் வாங்குவதற்கான ஆப்ஷன் உள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் தொகையை முன்கூட்டியே வித்டிரா செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒரு சிறிய அளவிலான அபராதம் வசூலிக்கப்படும்.
இது மாதிரியான சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் வழக்கமாக ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும். அதாவது இந்த திட்டங்கள் காலாவதி ஆவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் உடனடியாக அதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.