மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை..!!
Jan 26, 2026, 09:30 IST
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். எனினும் அருவியைப் பார்வையிட சுற்றுலா பணிகளை அனுமதிக்கப்பட்டுள்ளது.