கோவை குற்றால அருவியில் குளிக்க தடை...!!
Aug 25, 2026, 09:39 IST
கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை கோவை குற்றாலம் அருவி மூடப்படும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.