×

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா : பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,891பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25லட்சத்து 41ஆயிரத்து 168ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 27பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
 

தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,891பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25லட்சத்து 41ஆயிரத்து 168ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 27பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 809 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 439 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் 26-ஆம் தேதி தொடங்குகிறது.வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் தூத்துக்குடி தூய பனிமய மாதா திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கும் என மறைமாவட்ட ஆயர் அந்தோணி ஸ்டீபன் தகவல் தெரிவித்துள்ளார். முக்கிய நிகழ்ச்சியான கொடி பவனி ,நற்கருணை பவனி ,சப்பரபவனி போன்றவையும் பக்தர்கள் இன்றி நடக்கும் என்றும் அரசின் வழிகாட்டுதல்படி பேராலயத்திருவிழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.