×

பி.ஆர்க் படிப்பு: என்.ஆர்.ஐ-க்கு 15 சதவிகித ஒதுக்கீடு வழங்க வேண்டும்! – அண்ணா பல்கலைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பி.ஆர்க் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பாணையை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க் எனப்படும் இளநிலை கட்டிடக்கலையியல் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. இந்த ஆண்டு அந்த ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக் கழகம் பின்பற்றவில்லை. இதை எதிர்த்து சிங்கபூரில் வசிக்கும் ஷிவானி அருண்
 

பி.ஆர்க் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அறிவிப்பாணையை 2 வாரங்களில் வெளியிட வேண்டும் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க் எனப்படும் இளநிலை கட்டிடக்கலையியல் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது. இந்த ஆண்டு அந்த ஒதுக்கீட்டை அண்ணா பல்கலைக் கழகம் பின்பற்றவில்லை. இதை எதிர்த்து சிங்கபூரில் வசிக்கும் ஷிவானி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அப்போது அண்ணா பல்கலைக் கழகம் சார்பில், “15 சதவிகித இட ஒதுக்கீடு என்பது மொத்த மாணவர் எண்ணிக்கையில் வழங்கப்பட வேண்டுமா அல்லது கூடுதலாக வழங்கப்பட வேண்டுமா என்று கட்டிடக்கலை கவுன்சில் அறிவிக்கவில்லை. இதனால் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை” என்று கூறப்பட்டது. புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் இருந்து இதுமாதிரியான பதில் வந்தது அதிர்ச்சியை அளித்தது.


கட்டிடக்கலை கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 15 சதவிகித இடத்தை வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறியது.
இதைத் தொடர்ந்து “சென்னை அண்ணா பல்கலைக் கழகம் பி.ஆர்க் படிப்பில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிவிப்பாணை வெளியிட வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.