☰
×

முதலமைச்சர் விஜய்யை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

 

சென்னை எம்.ஆர்.சி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜயின் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.      `

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் காலந்துகொள்ளவுள்ளார். இதற்காக அவரை வரவேற்று தவெக சார்பில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மழைக்காலம் என்பதால் பேனர்கள் சரிந்து விழும் அபாயம் இருப்பதாக மாநகராட்சி எச்சரிக்கையைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் பேனர்களை தவெகவினர் அகற்றினர். சென்னை மாநகராட்சியின் எச்சரிக்கையை அடுத்து முதலமைச்சர் விஜய் உட்பட அனைவரது கட் அவுட்களும் அகற்றப்பட்டன. 

எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இல்லத் திருமண விழாவில் வரவேற்புக்காக விஜய் மற்றும் ஜெகன்மோகன் கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. மழைக் காலம் என்பதால் கட் அவுட் விழுந்து விபத்து ஏற்படலாம் என சென்னை மாநகராட்சி எச்சரித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அவற்றை அகற்றினர்.