×

‘சாலையில் நடந்து சென்ற அமித்ஷாவை’ நோக்கி பதாகை வீச்சு – பரபரப்பு சம்பவம்!

சென்னை வந்த அமித்ஷா, சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது பதாகை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர். அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அவர் விமான நிலையத்தில்
 

சென்னை வந்த அமித்ஷா, சாலையில் நடந்து சென்ற போது அவர் மீது பதாகை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி, அதிமுக அமைச்சர்கள், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அவர்களுடன் பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் உடன் இருந்தனர்.

அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அவர் விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். வழி நெடுகிலும் பாஜகவினர் குவிந்து அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், வி.எஸ்.கே சாலையில் காரில் இருந்து இறங்கி, தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டு நடந்து சென்ற அமித்ஷாவை நோக்கி ஒரு நபர் பதாகையை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த பாஜகவினர் அந்த நபரை தாக்க முயன்றுள்ளனர். அதனை தடுத்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், அமித்ஷா மீண்டும் காரில் ஏறி லீலா பேலஸ் சென்றடைந்தார்.