×

“குடிகார குள்ளநரி”- அதிமுக தலைமை அலுவலகம் எதிரே சி.வி.சண்முகத்தை விமர்சித்து பேனர் 

 

அதிமுக தலைமை அலுவலகம் எதிரே சி.வி.சண்முகத்தை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளர். இன்று நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் எதிரே சி.வி.சண்முகத்தை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த பேனரில் ‘அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி’,  ‘இன்று அனாதையாக வந்து ஓலமிடும் குடிகார குள்ளநரி’ என்ற வாசகங்களும், சிங்கம், குள்ளநரி விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது