ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை...முழு லிஸ்ட் இதோ!
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வாராந்திர விடுமுறைகள் (ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள்) மற்றும் பண்டிகைகளும் அடங்கும். சில விடுமுறை நாட்கள் மாநிலங்கள் அல்லது நகரங்களில் மட்டுமே பொருந்தும்.
2026 ஜூலை மாதத்தில் 5,12,19, 26ஆம் தேதிகளில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மேலும், ஜூலை 11ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, ஜூலை 25ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனை தவிர, பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 6ஆம் தேதி எம்.எச்.ஐ.பி தினத்தை முன்னிட்டு மிசோரம் மாநிலம், ஐஸ்வாலில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை 9ஆம் தேதி பெஹ்டியான் சிப்பித் திருவிழாவை முன்னிட்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை 16ஆம் தேதி ஜெகநாத் பூரி கோயிலின் ரத யாத்திரையையொட்டி, ஒடிசாவில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூலை 18: துருக்பா சே சே பண்டிகையை முன்னிட்டு சிக்கிம் மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்படும். கர்ச்சி பூஜையை முன்னிட்டு திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும். சுதந்திரப் போராட்ட வீரர் ஷஹீத் உதம் சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு ஹரியானாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஜூலை மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், ஆன்லைன் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.