×

வங்கி சேவைகள் 5 நாட்கள் பாதிக்க வாய்ப்பு!

 

வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் காரணமாக தொடர்ந்து 5 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. (திங்கள்-புதன்). வங்கிகளுக்கு 5 நாள் வேலைவாரத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர். செப்டம்பர் 30ஆம் தேதி அரையாண்டு கணக்கு நிறைவு நாளாக இருப்பதால், வேலைநிறுத்தம் வங்கி சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 3 நாள் வேலைநிறுத்தத்துடன் முந்தைய வார இறுதியும் (சனி, ஞாயிறு) இணைவதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம். வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசு பரிவர்த்தனைகளுக்கு சிரமம் ஏற்படலாம். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்து, சேவைகள் தடையின்றி தொடர ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.