முதலமைச்சர் விஜயுடன் வங்கி அதிகாரிகள் சந்திப்பு..!!
தமிழக முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவ, சென்னை முதன்மை மண்டல மேலாளர் ராஜசேகரன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
இதேபோல், சிட்டி யூனியன் வங்கியின் தலைவர் ஜி.மகாலிங்கம், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் ஆர்.விஜய் ஆனந்த் ஆகியோரும், கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பி.ரமேஷ்பாபு, செயல் இயக்குநர் பி.சங்கர், இணை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைமை அலுவலர் என்.சக்கரவர்த்தி ஆகியோரும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சலீ எஸ்.நாயர், செயல் இயக்குநர் எம்டி.வின்சென்ட், செயல் துணைத் தலைவர் பி.ஆர்.அசோக்குமார், சென்னை மண்டல மேலாளர் வெங்கடேசன் ஆகியோரும், பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை - தலைமைப் பொது மேலாளர் விவேகானந்த் செளபே, பொது மேலாளர்கள் எம்.வி.ஆர்.முரளி கிருஷ்ணா, ரவிக்குமார் ஆகியோரும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.