×

சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர் பங்காரு அடிகளார் - வைரமுத்து இரங்கல் 

 

சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்; பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து  தனது சமூகவலைத்தள பக்கத்தில், 

சமய பீடத்தைச்
சமுதாய பீடமாய் மாற்றியவர்

அடித்தட்டு மக்களுக்கு
அடைத்துக் கிடந்த
ஆன்மிகக் கதவுகளை
எளியவர்க்கும் மகளிருக்கும்
திறந்துவிட்டவர்

சமயப் பொதுவுடைமையாளர் 
பங்காரு அடிகளார் மறைவால்
துயரமுறும்
அத்துணை இதயங்களுக்கும்
ஆழ்ந்த இரங்கல்

பீடம் கண்டவரின்
பீடு புகழ்
நீடு நிலவட்டும் என்று பதிவிட்டுள்ளார்.