×

சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிப்பு

வடபழனி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றுவர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். சமீப நாட்களாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டத்தால் வடபழனி ஆண்டவர்
 

வடபழனி ஆண்டவர் கோவிலில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக, ஆடி கிருத்திகை விழாவான நாளை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். விழாவில் பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றுவர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். சமீப நாட்களாக கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டத்தால் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவர். இதனால், கொரோனா பெருந்தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி கிருத்திகையான நாளை ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆகமவிதிகளின் படி, நான்குகால பூஜைகள் நடத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வடபழனி முருகன் கோவில் மட்டுமின்றி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.