×

மலை கிராமத்திற்கு குதிரையில் கொண்டு செல்லப்படும் வாக்கு பெட்டி 

 

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறாத நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போது சாலை வசதி இல்லாத  போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களுக்கு குதிரை  கழுதை மூலம் வாக்குப்பொட்டி அனுப்பு அவலம் கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


இந்தியாவில் தமிழகத்தில்16 வது சட்டமன்றதேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில்போடி சட்டமன்ற தேர்தலில் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் பெரியகுளம் பகுதியில்அகமலை ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலை கிராமங்களுக்கு வாக்குப் பெட்டி அனுப்பும்பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக  போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 346 வாக்குச்சாவடிகள் இன்று வாக்குப் பெட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையா தலைமையில் அனுப்பப்பட்டு வருகின்றன.

மலை கிராமங்கள் ஆன காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் டாப் ஸ்டேசன் அகமலை  பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாக வாக்குப் பெட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டி வாக்குப்பதிவு அலுவலர் வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப் பெட்டி துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்புடன்குதிரை மூலம் அனுப்பப்பட்டது. கடந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இப்பவும் வாக்குப் பெட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரை மற்றும் கழுதை மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றனர் வனத்துறை இடையூறுகாரணமாக  ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க முடியாமல் நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பெட்டிகளை குதிரை மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன வரும் ஆட்சியாளர்கள் தமிழக முதல்வரும் வெற்றி பெறும் போடி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பவரும்  இதற்கு தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்