அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 18 மாடுகள் பிடித்து பாலமுருகன் முதல் இடம்
9ம் சுற்றில் களமிறங்கிய வலையங்குளம் பாலமுருகன் (401) ஒரே சுற்றில் 18 மாடுகள் பிடித்து முதல் இடம் வந்துள்ளார்.
பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு என புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 10வது சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள் 27 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 20 பேர் மற்றும் பார்வையாளர்கள் 7 பேர் என மொத்தம் 54 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 9 சுற்றுகள் முடிந்த நிலையில் கார்த்தியை பின்னுக்குத்தள்ளி 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் வலையங்குளத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலமுருகன். 16 காளைகளை அடக்கி கார்த்தி இரண்டாம் இடத்தையும், 10 காளைகளை அடக்கி மற்றொரு கார்த்திக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.